×

சார்பு நீதிமன்றம் அமைக்க கோரி வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்

நிலக்கோட்டை, பிப்.27: நிலக்கோட்டையில் சார்பு நீதிமன்றம் அமைக்க வலியுறுத்தி வட்டார வழக்கறிஞர் சங்கத்தினர், இரண்டாவது நாளாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நிலக்கோட்டையில் சார்பு நீதிமன்றம் அமைக்கவும், புதிய நீதிமன்ற கட்டிடம் உடனடியாக கட்ட வலியுறுத்தியும் நிலக்கோட்டை வட்டார வழக்கறிஞர் சங்கம் சார்பில் மேஜிஸ்ட்ரேட் நடுவர் நீதிமன்றம் முன்பு, நேற்று முன்தினம் முதல் 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றைய போராட்டத்தின்போது சங்கச் செயலாளர் இளங்கோவன் திடீரென மயங்கி கீழே விழுந்தார். தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நிலக்கோட்டை தாசில்தார் ஜெயபிரகாஷ் தலைமையிலான அதிகாரிகள், வழக்கறிஞர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனிடையே மயக்கமடைந்த வழக்கறிஞருக்கு, நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

 

Tags : Nilakottai ,District Lawyers Association ,Nilakottai District Lawyers Association ,
× RELATED சர்வதேச மகளிர் தின விழா 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்