தஞ்சாவூர், பிப்.27: ஒரத்தநாடு வட்டத்தில் வேளாண்மை கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவிகள் பள்ளி மாணவர்களிடையே சாலை பாதுகாப்பு குறித்து பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டத்தில் கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் திட்டத்தின்கீழ் வேளாண்மை கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் வேளாண் மாணவிகள் புதூர் அரசு மேல்நிலை பள்ளியில் பயிலும் மாணவர்களிடையே சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
இதன் ஒரு பகுதியாக அப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் இவ்விழிப்புணர்வு பேரணியில் கலந்துகொண்டு சாலை பாதுகாப்பு பற்றியும், அதன் விதிமுறைகள் பற்றியும் விழிப்புணர்வு பெற்றனர். இந்த விழிப்புணர்வு பேரணியில் காமாட்சி, கனிமொழி, கார்த்திகை செல்வி, காவியா, கவிதா, காவியா, கீர்த்தனா, லிவிதப்பிரியா ,லோக சம்யுக்தா மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் பதாகைகளை ஏந்தியபடி பேரணியாக சென்றனர்.
