×

ரூ.1500 கோடி மோசடி குஜராத்தில் தெலங்கானா நபர் உட்பட 3 பேர் கைது

ராஜ்கோட்: குஜராத்தில் ஆன்லைன் கேமிங், ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு உள்ளிட்ட சைபர் மோசடிகள் மூலம் ரூ.1,500 கோடி பணம் மோசடி செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ஈடுபட்ட குற்றவாளிகள் 15 தனியார் வங்கிகளில் வேளாண் உற்பத்தி சந்தைக்குழு பெயரில் கணக்குகள் தொடங்கி மோசடி பணத்தை மாற்றி உள்ளனர்.

மேலும், குஜராத்தில் வைர நகை வியாபாரிகள் தங்கள் நகை மற்றும் பணத்தை அனுப்ப அங்காடியா எனும் பாரம்பரியமான கூரியர் நிறுவனத்தை பயன்படுத்தி பண பரிமாற்றம் செய்துள்ளனர். இதுதொடர்பாக ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தெலங்கானாவை சேர்ந்த அடிலுதீன் முகமது உட்பட மேலும் 3 பேர் கைதாகி உள்ளனர்.

Tags : Gujarat ,Rajkot ,Agricultural Produce Market Committee ,
× RELATED தென்மேற்கு ரயில்வேயில் 295 பணிக்கான...