×

வருவாய்த்துறை சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

தர்மபுரி, பிப்.27: வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே காத்திருப்பு போராட்டம், 2வது நாளாக நேற்று நடந்தது. போராட்டத்திற்கு கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் துரைவேல் தலைமை வகித்தார். போராட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நிலஅளவைத் துறையில் பணிபுரிந்து வரும் அனைத்து நிலையிலான அலுவலர்களை பாதுகாக்க, சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும். அரசுப்பணியின் போது உயிரிழக்கும், அரசு ஊழியர்களின் குடும்பத்திற்கு கருணை அடிப்படை பணி நியமனத்திற்கான உச்சவரம்பு 25 சதவீதமாக நிர்ணயம் செய்யவேண்டும். அனைத்து காலிப்பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. போராட்டத்தில் அகிலன் அமிர்தராஜ், ரங்கன், பிரபு, கணேசன், சின்ராசு, சிவன், சிவசங்கர், தனபால், பகவதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Revenue Department Associations ,Dharmapuri ,Federation of Revenue Department Associations ,Dharmapuri Collector ,Federation's ,District Coordinator ,Duraivel ,Revenue and Disaster Management Department ,Land Survey Department ,
× RELATED வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்