×

உலக மக்கள் நன்மைக்காக தன்வந்திரி மகா யாகம்

ஈரோடு,  பிப். 9: ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி கரையில் உள்ள சோழீஸ்வரர் கோயில்  அருகே உலக மக்கள் நன்மைக்காக வரும் 20, 21ம் தேதி ஆகிய 2 நாட்கள் தன்வந்திரி மற்றும் சப்த மாதா, அதிருத்ர மகாயாகம் ஆகம முறைப்படி   தஞ்சாவூர் மாவட்ட  ஆதிசிவசக்தி சித்தர் ஞானபீட ல அகோர மகான்  ருத்ர சித்தர் தலைமையில் நடைபெற உள்ளது. இதில், 20ம் தேதி (சனி) காலை 8.30  மணி முதல் 11.30 மணி வரை கணபதி ஹோமம், ஸ்கந்த, லட்சுமி, நவக்கிரக,  தன்வந்திரி யாகமும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை பூர்வாங்கம்  சப்தமாத்ரு ஆவரணம், காளி, தாரா, வித்யா, புவனேஸ்வரி, திரியுர பைரவி,  தூமாவதி, ராஜமாதங்கி, 64 பைரவ யாரம், ப்ரமகால யாகவேள்வி பூர்ணாகுதி,  தீபாராதனை நடைபெற உள்ளது. 21ம் தேதி காலை 7.30 மணி பகல் 12.30 மணி வரை கஜ,  அஸ்வ, கோ, கன்னிகா, சுவாசினி பூஜைகளும், அதிருத்ர மகா யாக வேள்வியும்  நடைபெற உள்ளது. இந்த யாகத்திற்கான கால்கோள் விழா நேற்று நடந்தது.  விழாவுக்கான ஏற்பாடுகளை தமிழ்செல்வன், பெரியசேமூர் முன்னாள் நகராட்சி  தலைவர் சுப்பிரமணியம், ரமேஷ், தர்மன் ஆகியோர் செய்திருந்தனர். இந்த  விழாவில் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Dhanvantari Maha Yagya ,world ,
× RELATED உலக கோப்பை பயிற்சி ஆட்டம் இந்தியா – வங்கதேசம் இன்று பலப்பரீட்சை