×

விமான டிக்கெட்டுகளை திரும்பப் பெறும் விதிகளை மாற்றம் செய்து விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவு!!

டெல்லி: 48 மணி நேரத்தில் விமான டிக்கெட்டை ரத்து செய்தாலோ, பயணத்தில் மாற்றம் செய்தாலோ கூடுதல் கட்டணம் கிடையாது. விமான டிக்கெட்டுகளை திரும்பப் பெறும் விதிகளை மாற்றம் செய்து விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. 24 மணி நேரத்தில் பயணி பெயரில் பிழை சுட்டிக்காட்டப்பட்டு, டிக்கெட்டில் திருத்தம் செய்ய கட்டணம் பெற கூடாது. திருத்தம் கோரும் டிக்கெட் விமான நிறுவன தளத்தில் புக் செய்திருந்தால் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என விமான போக்குவரத்து இயக்குநரகம் ஆணையிட்டுள்ளது.

Tags : Directorate General of Civil Aviation ,Delhi ,
× RELATED கேரளா ஸ்டோரி 2 திரைப்படம் நாளை வெளியாக...