வாஷிங்டன்: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த அதிவேக படகு மீது கியூபா கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். கியூபா கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டதில் படகில் இருந்த 4 பேர் உயிரிழந்தனர். தமது கடல் எல்லைக்குள் ஊடுருவியதால் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கியூபா உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
