×

பெண் கஞ்சா வியாபாரி குண்டாஸில் கைது

விருதுநகர், பிப். 26: சிவகாசியில் கஞ்சா விற்பனை செய்த பெண் குண்டாசில் கைது செய்யப்பட்டார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஆலாஊரணி பகுதியை சேர்ந்தவர் ராஜலட்சுமி (29). இவர், பிப்.1ம் தேதி அன்று விற்பனைக்காக 1.2 கிலோ கஞ்சா வைத்திருந்ததை திருத்தங்கல் போலீசார் பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.

இவர், தொடர்ந்து இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவதால், குண்டாஸில் கைது செய்ய மாவட்ட எஸ்பி கண்ணன், கலெக்டர் சுகபுத்ராவுக்கு பரிந்துரைத்தார். கலெக்டர் உத்தரவுப்படி, ராஜலட்சுமியை குண்டாஸில் கைது செய்து, மதுரை மத்திய சிறையில் திருத்தங்கல் போலீசார் அடைத்தனர்.

 

Tags : Kuntas ,Virudhunagar ,Sivakasi ,Guntazil ,Rajalakshmi ,Alaurani ,Virudhunagar district ,
× RELATED 30 ஆண்டு கால போக்குவரத்து நெரிசலுக்கு...