×

கள்ளழகர் கோயில் நிலை உயர்வு

மதுரை, பிப். 26: இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில். பக்தர்கள் வருகை அடிப்படையில், வசதிகள் மேம்பாடு, திருவிழாக்கள் நடத்துதல் உள்ளிட்ட பணிகளுக்காக, அவற்றில் பணியாற்றும் செயல் அலுவலர்கள் நிலை உயர்த்தப்படுகிறது.

இதன்படி, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பரிந்துரையின் பேரில், வருமானம் மற்றும் பக்தர்கள் எண்ணிக்கை அடிப்படையில் 17 கோயில்களின் நிலையை உயர்த்தி அரசு ஆணையிட்டுள்ளது. இதன்படி அழகர்கோயில் கள்ளழகர் திருக்கோயில். துணை ஆணையர் நிலையில் இருந்து இணை ஆணையர் நிலைக்கு உயர்ந்துள்ளது.

 

Tags : Kallazhagar Temple ,Madurai ,Hindu Religious and Endowments Department ,
× RELATED 30 ஆண்டு கால போக்குவரத்து நெரிசலுக்கு...