×

ஜாதகத்தில் நேரம் சரி இல்லை; வாலிபர் தற்கொலை

திருப்பூர், பிப். 26: திருப்பூரில் தொழில் தொடங்க முடியாத விரக்தியில் வாலிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர், பாண்டியன் நகர் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். இவர், அப்பகுதியில் உள்ள ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக உள்ளார். இவருடைய இளைய மகன் சிவபெருமான் (18). இவர், படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு பைக் மெக்கானிக் வேலை பழகி வந்தார்.

இந்நிலையில் தந்தை புரோட்டா மாஸ்டராக இருப்பதால் சிவபெருமானுக்கு சொந்தமாக உணவகம் தொடங்க வேண்டும் என ஆசை இருந்துள்ளது. இதனை நீண்ட நாட்களாக குடும்பத்தினரிடம் தெரிவித்து வந்தார். ஆனால், ஜாதகத்தில் நேரம் சரியில்லை என ஜோதிடர் கூறி உள்ளார். இதனால், மனமுடைந்த சிவபெருமாள் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திருமுருகன்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

 

Tags : Tiruppur ,Velmurugan ,Pandian Nagar ,
× RELATED இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை