×

கல்லணை கொள்ளிடம் பாலத்தில் பள்ளம்

திருக்காட்டுப்பள்ளி, பிப்.26: தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை கொள்ளிடம் ஆற்றின் புதிய பாலத்தில் கம்பிகள் தெரியும் நிலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால், அதனை சீர் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கல்லணையில் திருச்சி-தஞ்சை மாவட்டங்களை இணைக்கும் விதமாக கொள்ளிடம் ஆற்றில் ரூ.92 கோடியில் புதிதாக உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது.

அந்த பாலத்தின் ஒரு பகுதியில் தொடர்ந்து அடுத்தடுத்து பள்ளம் ஏற்பட்டு வருகிறது. அதனை அவ்வப்போது சரிசெய்து வந்த நிலையில் தற்போது அதில் புதிதாக கம்பிகள் தெரியும் அளவிற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் வருபவர்கள் தடுமாறி விழும் நிலை ஏற்பட்டு வருகிறது. உடனடியாக அந்த பள்ளத்தை சீர் செய்ய வேண்டும் என்று உரிய அலுவலர்களுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags : Kallanai Kollidam bridge ,Thirukattupalli ,Kollidam river ,Kallanai, Thanjavur district ,Trichy ,Thanjavur ,Kallanai… ,
× RELATED 30 ஆண்டு கால போக்குவரத்து நெரிசலுக்கு...