×

வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு போராட்டம்

பாடாலூர், பிப்.26: வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் வேலை நிறுத்த போராட்டத்தை நேற்று முன்தினம் தொடங்கினர். இதையொட்டி, ஆலத்தூர் தாலுகாவில் உள்ள தாசில்தார் அலுவலகத்தில் வருவாய்த்துறையினர் பணி செய்யாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

2-வது நாளாக நேற்றும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால், ஆலத்தூர் தாசில்தார் அலுவலகம் பணியாளர்கள் இன்றி அனைத்து இருக்கைகளும் வெறிச்சோடி காணப்பட்டது. வருவாய்த்துறை அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் ஊழியர்கள் யாரும் இல்லை என்றதும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். தொடர்ந்து போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளதால் இன்று அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்படும் என்று கூறப்படுகிறது.

Tags : Federation ,of Revenue Unions ,Badalur ,Federation of Revenue Unions ,Tahsildar ,Alathur taluka ,
× RELATED ஆலம்பாக்கம் ஊராட்சியில் புதிய நியாயவிலை கடை கட்டிடம் திறப்பு