×

இடைக்காட்டூரில் இடிந்த தடுப்பணை மீண்டும் கட்ட விவசாயிகள் வலியுறுத்தல்

மானாமதுரை, பிப்.9:  மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட முத்தனேந்தல்-இடைகாட்டூருக்கு இடையில்  வைகை ஆற்றில் கட்டப்பட்டிருந்த தடுப்பணை இடிந்ததால், அங்கு புதிய தடுப்பணை உருவாக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  மதுரை-ராமேஸ்வரம் நான்குவழிச்சாலை அருகே உள்ள முத்தனேந்தல் இடைக்காட்டுருக்கு இடையில் வைகை ஆறு செல்கிறது. மண் வளம் செரிந்த இப்பகுதியில் தடுப்பணை கட்டுவதன் மூலம் நிலத்தடி அதிகரித்து வைகை கூட்டு குடிநீர் திட்டத்திற்கு தேவையான தண்ணீர் கிடைப்பதுடன் அப்பகுதி விளைநிலங்களும் பயன்பெறும் வகையில் தடுப்பணை கட்ட முடிவு செய்யப்பட்டது.
அதன்படி முத்தனேந்தல் இடைக்காட்டூர் வைகை ஆற்றின் குறுக்கே 2006ம் ஆண்டு தடுப்பணை கட்டப்பட்டது. தடுப்பணை கட்டிய சில மாதங்களிலேயே வைகை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டபோது தடுப்பணை முற்றிலும் இடிந்துபோனது.

இதற்குப் பின்பு இங்கு தடுப்பணை உருவாக்கப்படும் என்று பொதுப்பணி துறையால் உறுதி கொடுக்கப்பட்டது. அதுமட்டுமல்லாது இந்த தடுப்பணையை கட்டிய பொதுப்பணி துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் காசிராஜன் கூறுகையில், ‘‘அண்மையில் கூட தமிழகத்தில் கட்டப்பட்ட தடுப்பணை ஒரு மாதத்தில்  இடிந்து  தண்ணீர் அனைத்தும் வெளியேறிய அக்கிராமம் நடந்தது. இதற்கு சில அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோன்று 2006ம் ஆண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் செயல்படுத்த வில்லை. தற்போது புதிய தடுப்பணையை உருவாக்கி இப்பகுதியில் நீர் ஆதாரங்களை ஆழ்குழாய் கிணறுகளில் நீர் ஊற்றுகளில் தண்ணீர் ஏற்படுத்துவதற்கு புதிய தடுப்பணை கட்ட வேண்டும். அதற்கு பொதுப்பணி துறை அமைச்சர்,கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.

Tags : dam ,Interstate ,
× RELATED வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்