×

அடித்தட்டு மக்களுக்கான உரிமை குரலாக திகழ்ந்தவர்: பிரதமர் மோடி புகழஞ்சலி

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ‘‘மூத்த தலைவர் நல்லகண்ணு அடித்தட்டு மக்களுடனான தொடர்புக்காகவும், உரிமை மறுக்கப்பட்டோர், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்காகக் குரல் கொடுக்கும் முயற்சிகளுக்காகவும் நினைவுகூரப்படுவார். சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களாலும் அவர் பெரிதும் மதிக்கப்பட்டார். அவரது எளிமையும் அதே அளவுக்கு குறிப்பிடத்தக்கது. எனது எண்ணங்கள் யாவும் அவரது குடும்பத்தினர் மற்றும் தொண்டர்களுடன் உள்ளன,’’ என தமிழில் பதிவிட்டுள்ளார்.

Tags : PM Modi ,Prashanjali ,Chennai ,Modi ,Communist Party of India ,Nallakannu ,X ,
× RELATED அதிமுக மகளிரணி இணைச் செயலாளராக லீமா...