புதுச்சேரி, பிப். 26: புதுச்சேரி ஆலங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் மணிபாரதி (36). தனியார் வங்கி கிளை மேலாளர். இந்நிலையில், கடந்த 22ம் தேதி மணிபாரதியின் மனைவி அனிதாவின், அக்கா மற்றும் அவரது பிள்ளையுடன் நகை எடுப்பதற்கு புறப்பட்டனர். அப்போது, மணிபாரதி வீடு அலமாரியில் வைக்கப்பட்டிருந்த நகை எடுக்க சென்றார். பின்னர், அலமாரி திறந்து பார்த்துபோது அதில் இருந்த 3.5 சவரன் நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே இச்சம்பவம் குறித்து மணிபாரதி கோரிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
