×

திருநகரில் மறைந்த முன்னாள் எம்பி இல்லத்தில் மு.க.ஸ்டாலின் ஆறுதல்

திருப்பரங்குன்றம், பிப். 9:  திருப்பரங்குன்றம் அருகே திருநகரில் முன்னாள் எம்பி அக்கனிராசு அவரது இல்லத்தில் கடந்த ஆண்டு நவ.22ல் மறைந்தார். இதையொட்டி நேற்று சிவகங்கை மாவட்டத்தில் கட்சி நிகழ்ச்சியை முடித்து விட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திருநகரில் உள்ள அக்கனிராசு இல்லத்திற்கு வந்து அவரது படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவரது மனைவி முத்துலட்சுமி மற்றும் மகன்களுக்கு ஆறுதல் கூறினார். உடன் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.

Tags : MK Stalin ,home ,Thirunagar ,
× RELATED அநீதிக்கு எதிரான வெற்றி நம் நாட்டின்...