- அரியலூர் எஸ்.பி.
- அரியலூர்
- அரியலூர் மாவட்டம்
- போலீஸ் விஸ்வேஷ்
- பா. சாஸ்திரி
- அரியலூர் மாவட்ட ஆயுதப்படை காவல் வாகனப் பிரிவு
அரியலூர், பிப்.25: அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி உத்தரவின்படி, அரியலூர் மாவட்ட ஆயுதப்படை வாகனப்பிரிவில் முதிர்ந்த நிலையில் உள்ள கழிவு செய்யப்பட்ட 7 காவல் வாகனங்கள் (6 இருசக்கர வாகனங்கள் மற்றும் 1 நான்கு சக்கர வாகனம்) பிப்ரவரி 28ம் தேதி அன்று காலை 10 மணி முதல் பொது ஏலம் அரியலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ளது.
ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் பிப்ரவரி 28 அன்று காலை 8 மணி முதல் 10 மணிக்குள் ரூ1.000 முன் வைப்பு தொகையினை செலுத்தி தங்கள் பெயர் மற்றும் முகவரியை பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்து கொண்டவர் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ளலாம், அவருடன் பிறருக்கு அனுமதியில்லை. கலந்து கொள்ள விரும்புவர்கள் தங்களது ஆதார் அடையாள அட்டையின் நகலை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும்.
மேலும், வாகனங்களை ஏலம் எடுத்த நபர்கள் அன்று மாலைக்குள் ஏலத் தொகையுடன் ஜி.எஸ்.டி விற்பனை வரியையும் சேர்த்து செலுத்த வேண்டும். வாகனத்தை ஏலம் எடுத்தவர் உரிய தொகையை செலுத்த தவறினால் முன்பணம் திருப்பி தரமாட்டாது. வாகனத்துடன் ஏலம் எடுத்ததற்கான சான்று மட்டுமே வழங்கப்படும், வாகனத்தின் பதிவு சான்று வழங்க இயலாது.
பொது ஏலத்தில் காவல்துறை சார்ந்த எவரும் கலந்து கொள்ள அனுமதியில்லை. வாகனங்களை ஏலம் நடைபெறும் தேதி அன்று காலை 8 மணி முதல் பார்வையிடலாம். ஏல நடவடிக்கைகள் அனைத்தும் ஏலக்குழு அலுவலர்களால் முடிவு செய்யப்படும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆயுதப்படை அலுவலகத்தை அணுகலாம் என எஸ்.பி.விஷ்வேஷ் பா.சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
