×

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை: சூப்பர் ஸ்பெஷாலிட்டியாக தரம் உயர்வு: 6 மாடி கட்டிடத்திற்கு முதல்வர் அடிக்கல்

சென்னை: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நீரிழிவு மற்றும் தீக்காயத்திற்கு சிறப்பு சிகிச்சை செய்யப்படுகிறது. இந்த மருத்துவமனை தற்போது சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, ஜப்பான் நாட்டு உதவியுடன் ரூ.135 கோடியில் அதிநவீன வசதிகளுடன், 2.68,817 லட்சம் சதுர அடியில் 6 மாடி கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு  மருத்துவ கல்வி இயக்குனர் ஆர்.நாராயணபாபு தலைமை வகித்தார். மருத்துவமனை முதல்வர் வசந்தாமணி முன்னிலை வகித்தார்.
இந்த கட்டிடத்தில் அனைத்து மருத்துவ வசதிகளும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் ஒவ்வொரு சிகிச்சை பிரிவும் செயல்படும். இதில் அதிநவீன அறுவை சிகிச்சை அரங்கம், பொது அறுவை சிகிச்சை, தீக்காயம், நரம்பு மற்றும் நுண்அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, தீவிர சிகிச்சை பிரிவு, தீவிர இதய சிகிச்சை பிரிவு, தீவிர தீக்காய சிகிச்சை பிரிவு, டயாலசிஸ் சிகிச்சை பிரிவு ஆகியவை அமைக்கப்பட உள்ளன. 410 படுக்கைகளுடன் கூடிய இந்த புதிய கட்டிடம் ஏசி வசதி கொண்டதாகும்.

Tags : Kilpauk Government Hospital: Upgradation ,CM ,building ,
× RELATED குமரி மாவட்டத்தில் கடந்த 24 மணி...