- பிரதம செயலாளர்
- முருகானந்தம்
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- பிரதான தேர்தல் அதிகாரி
- அர்ச்சனா பட்நாயக்
சென்னை: சட்டமன்றத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து துறை சார்ந்த ஒருங்கிணைப்பு அலுவலர்களுடன் தலைமை செயலாளர் முருகானந்தம் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உள்ளிட்ட தேர்தல் அதிகாரிகள், காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிர்வாக அலுவலர்கள், துறை சார்ந்த ஒருங்கிணைப்பு அலுவலர்களுடன் தேர்தல் பணிகள் குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்ய பறக்கும் படைகள், கண்காணிப்பு குழுக்கள் தீவிரமாக செயல்பட வேண்டும். துறை வாரியான பணிகள் காலக்கெடுவிற்குள் நிறைவேற்றப்பட வேண்டும் என துறை அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் முருகானந்தம் அறிவுறுத்தியுள்ளார்.
