×

கார் மோதி விவசாயி உயிரிழப்பு

உளுந்தூர்பேட்டை, பிப். 25: உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிருஷ்ணாரெட்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் குப்புசாமி மகன் கலியபெருமாள் (45), விவசாயி. இவர் தற்போது விருத்தாசலம் வட்டம் நறுமணம் கிராமத்தில் வசித்து வரும் நிலையில், சொந்த ஊரில் உள்ள நிலத்தை விற்பனை செய்வதற்காக நேற்று முன்தினம் சொந்த ஊருக்கு செல்வதற்காக பேருந்து மூலம் கெடிலம் வந்துள்ளார். கெடிலம் குறுக்கு ரோடு அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது அவ்வழியாக திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் மோதியதில் தூக்கி வீசப்பட்டு தலையில் படுகாயம் அடைந்த கலியபெருமாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற திருநாவலூர் காவல்நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார், அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Ulundurpet ,Kaliyaperumal ,Kuppusamy ,Krishnarettipalayam ,Lugamam ,Virudhachalam taluk ,
× RELATED கறம்பக்குடி பகுதியில் பூத்து குலுங்கும் செண்டி பூக்கள்