×

அழுகை… ஆவேசம்… மவுனம்… கூட்டம் என்ற பெயரில் ஷூட்டிங் ஸ்கிரிப்ட்டை பார்த்து நடித்த விஜய்: நெட்டிசன்கள் மானபங்கம்

வேலூர் மாவட்டம் அகரம்சேரியில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் அனுமதி உள்ளவர்கள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் விஜய் ரசிகர்கள் பலர் போலீசாரை தள்ளிக்கொண்டு உள்ளே சென்றனர். இருக்கையில் அமராமல் நாற்காலிகள் மீது ஏறி நின்று கூச்சலிட்டனர். இந்நிலையில் கூட்டத்தில் பேசிய விஜய் முதலில் ஒரு குட்டிக்கதை சொல்லலாமா? எனக்கேட்டுக்கொண்டு விளங்காத ஒரு கதையை கூறினார்.

தொடர்ந்து பேச ஆரம்பித்த அவர், திடீரென ஆவேசப்பட்டார். சில நொடிகள் வார்த்தை வராதது போல் தவித்தார். பிறகு கண் கலங்குவது போல் நடித்தார். அதன்பிறகு ‘சாரி’ என்று சொல்லிவிட்டு மீண்டும் பேச ஆரம்பித்தார். இதை நேரடி ஒளிபரப்பில் பார்த்த பலரும், ‘‘உலக மகா நடிப்புடா சாமி’’ என்று கலாய்த்தனர். அது உண்மைதான் என்பதை அவரது ஸ்கிரிப்ட் காட்டிக்கொடுத்துள்ளது. விஜய் பேசுவதற்காக எழுதி கொடுத்த ‘ஸ்பீச் காபி’ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதில் உள்ள ஒரு சில தகவல்கள்: ‘எவ்வளவு கத்தி பேச முடியுமோ அவ்வளவு கத்த வேண்டும். (குறிப்பு) இந்த வரியை பேசி முடித்து விட்டு சிறிது கேப் விட வேண்டும்.பேச முடியாதது போல் செய்து, மைக்கை விட்டு சற்று நகர்ந்து சென்று அழவும். (உங்கள் பாணியில்).மறுபடியும் மைக் பக்கம் வந்து, கண்கலங்கி ‘சாரி’ சொல்லிவிட்டு, எமோஷனலாக பேச தொடங்கவும் என எழுதப்பட்டிருந்தது. இந்த ஸ்கிரிப்ட்டில் எழுதியிருந்ததை ஒரு வரி கூட தவறாமல் விஜய் சூப்பராக பேசி, மவுனித்து, நடித்து காட்டினார் என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் மானபங்கப்படுத்தி வருகின்றனர். மைக் முன்னாடியும் கேமரா முன்னாடி நடிப்பதைப் போல நடித்து விஜய் வெளுத்து வாங்கிவிட்டார் என்று ஏகத்துக்கும் அவரை கலாய்த்து வருகின்றனர்.

Tags : Vijay ,Akaramsari, Vellore district ,
× RELATED அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களை...