×

மறியல் போராட்டம் 6 வது நாளாக நீடிப்பு

பெரம்பலூர்,பிப்.8: புதிய ஓய்வூதிய திட்டத்தை (சிபிஎஸ்) ரத்து செய்திட வேண்டும்.சத்துணவு, அங் கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், எம்ஆர்பி செவிலியர்கள், ஊராட்சி செயலாளர்கள், சமூக வன பாதுகாவலர்கள், மருத்து வம் மற்றும் பொதுசுகாதா ரத்துறையில் ஒப்பந்த முறையில் பணியமர்த்தப் பட்ட ஊழியர்கள் உள்ளிட்ட தொகுப் பூதியம், மதிப்பூதி யம், சிறப்பு காலமுறை ஊ தியம் எனக் கொத்தடிமை கூலிமுறை பெறுவோருக் குக் காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். கொ ரோனாவை காரணம் காட்டி பறிக்கப்பட்ட அகவிலைப்படி, சரண்டர் உள்ளிட்ட உரிமைகளை வழங்கிடவே ண்டும். அரசுத் துறையில் உள்ள 4.5லட்சத்திற்கும் மே ற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கம் சார்பில் பெரம்பலூரில் பல்வேறு போராட்டம் நடந்து வருகிறது. போராட்டத்தின் 6வது நா ளான நேற்று பெரம்பலூர் பாலக்கரையில் நடைபெ ற்ற மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்டத் தலைவர் இளங்கோ வன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர், சிவக்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் சுப்ரமணி யன், தமிழ்நாடு சாலைப்ப ணியாளர்கள் சங்க மாநில துணைத் தலைவர் மகேந் திரன் மற்றும் நிர்வாகிகள் என சாலை மறியலில் ஈடுபட்ட 3பெண்கள் உள்பட 23 பேர் பெரம்பலூர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

Tags :
× RELATED வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பு:...