மின்னணு வாக்குப்பதிவு உள்ள பதிவுகளை அழிக்க 1083 இயந்திரங்கள் சென்னைக்கு அனுப்பும் பணி அறையை திறக்க சாவி இல்லாமல் ஊழியர்கள் திண்டாட்டம்

பெரம்பலூர்,பிப்.8: 15 ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்திய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் உ ள்ள பதிவுகளை அழிப்பதற்காக 1083 கருவிகள் சென்னைக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அறை திறப்பதற்கான சாவி இல்லாமல் திண்டாடிய அலுவலர்களால் பரபரப்பு ஏற்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் 15 ஆண்டுகளுக்கு முன் அதாவது 2006ம் ஆண்டுக்கு முன் நடந்த தேர்தல்களில் பயன்படுத்தப்பட்ட எம்-1 ரகத்தை சேர்ந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை, அதிலுள்ள பதிவுகளை அழிப்பதற்காக சென்னையில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் எனப்படும் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கும் பணிகள் நேற்று பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியஅலுவலகவளாகத்தில் நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிட த்தின் பின்புறம் உள்ள சேவை மைய கட்டிடத்தில் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 179 மற்றும் கன்ட்ரோல் யூனிட் 904 என மொத் தம் 1083 கருவிகள் பெரம்ப லூர் சப்-கலெக்டர் பத்மஜா முன்னிலையில் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த சேவை மைய கட்டிடத்தின் பாதுகாப்பு அறைக்கான சாவி காணாமல் அலுவலர்கள், பணியாளர்கள் அந்த அறைக்கு முன் அவசர அவசரமாக தேடத்தொடங்கினர். சரியான சாவி கிடை க்காததால் 10க்கு மேற்பட்ட இதர அறைகளின் சாவிகளை கொண்டு வந்து பூட்டுக்கு ஒத்து வருமா என சரி பார்த்தனர். கால்மணி நேர போராட்டத்திற்கு பிறகு சாவியை கண்டுபிடிக்க முடியாததால் திணறினர். பின்னர் விருந்தினர் மாளிகையில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை லாரியில் ஏற்றலாம் எனக்கூறி அனைவரையும் அங்கு சென்றனர். அங்குள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கட்டுப்பாட்டு கருவிகள் அட ங்கிய தகரப் பெட்டிகளை வெளியே கொண்டுவந்து சென்னைக்கு அனுப்புவதற்கான லாரியில் ஏற்றினர். துறைரீதியான அலுவலர்க ளின் கவனக்குறைவால் அறைக்கான சாவி இல்லாமல் அதிகாரிகள் முன்னிலையில் ஊழியர்கள் அல்லாடியது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் விஷயத்தில், வருவாய்த்துறை, வளர்ச்சித்துறை ஊழியர்களின் அலட்சிய போக்கையே அம்பலப்படுத்தியது.

Related Stories:

>