×

இந்திய பொருளாதாரத்தில் அமெரிக்க வரி மாற்றத்தின் தாக்கங்கள் எப்படியிருக்கும்?: நிர்மலா சீதாராமன் பதில்

 

புதுடெல்லி: அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததைத் தொடர்ந்து, அனைத்து உலக நாடுகளுக்கும் 15 சதவீத புதிய வரியை டிரம்ப் அறிவித்துள்ளார். இது வரும் 24ம் தேதி முதல் 150 நாட்களுக்கு அமலில் இருக்கும். இந்த வரி மாற்றம் இந்திய பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து, ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் நேற்று கேள்வி எழுப்பப்பட்டது.

அவர் பதிலளி க்கை யில், ‘‘அமெரிக்க வரி மாற்றங்களின் நிலை குறித்து ஒன்றிய வர்த்தக அமைச்சகம் ஆய்வு செய்து வருகிறது. அமெரிக்கா உடனான இருதரப்பு இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தைக்காக எப்போது வாஷிங்டன் செல்வது என பிரதிநிதிகள் குழு முடிவெடுக்க வேண்டும். எனவே இவ்வளவு சீக்கிரத்தில் பதிலளிப்பது பொருத்தமாக இருக்காது’’ என்றார்.

மேலும் அவர், ‘‘வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்வதில் இந்தியா மிகவும் தெளிவான பாதையில் உள்ளது. வர்த்தக ஒப்பந்தம் செய்வதற்கான எங்கள் முயற்சி இனியும் தொடரும். உலகளவில் வர்த்தகம் செய்வதன் நன்மையையும், உலகளாவிய சந்தையை அணுகும் நன்மையையும் இந்திய பொருளாதாரம் பெற விரும்புகிறது’’ என்றார்.

 

Tags : US ,Nirmala Sitharaman ,New Delhi ,Supreme Court ,President ,Trump ,
× RELATED உலகின் நேரக் கணக்கீட்டை மாற்ற...