×

பெயர்கள் நீக்கப்பட்டதற்கு பழிவாங்கும் விதத்தில் மக்கள் வாக்களிக்க வேண்டும்: மம்தா பானர்ஜி வேண்டுகோள்

மேற்கு வங்கம், முர்ஷிதாபாத்தில் கடந்த ஆண்டு வக்பு சட்டத்திருத்தத்திற்கு எதிராக பெரும் கலவரம் நடந்தது. இந்த போராட்டத்தின் மையமாக இருந்த சம்ஷெர்கஞ்சில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டு பேசியதாவது: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் போது மக்களின் பெயர்கள் நீக்கப்பட்டதற்கும், சிறப்பு தீவிர திருத்த அறிக்கைக்கு எதிராகப் பழிவாங்க உங்கள் வாக்குகளைப் பதிவு செய்யுங்கள்.

அப்போதுதான் முடிவுகள் அதைப் பிரதிபலிக்கும். மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வரை திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். மேற்கு வங்கத்தில் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதற்குப் பின்னணியில் ஒன்றிய அமைச்சர் ஒருவர் இருந்தார்.

உனக்குத் தைரியம் இருந்தால்,என்னுடன் அவர் நேரடியாக மோத வேண்டும். தேர்தல் காலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். மேற்கு வங்கத்தின் நலன் கருதி, நமது வாக்குச்சாவடி முகவர்கள் யாரும் பாஜவிடம் தங்களை விற்க மாட்டார்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Mamata Banerjee ,Murshidabad, West Bengal ,Chief Minister ,Shamsherganj ,
× RELATED ஒடிசா மாநில உயர் கல்வி நிறுவனங்களில்...