- மோடி
- இஸ்ரேலிய
- பாராளுமன்ற உறுப்பினர்கள்
- ஜெருசலேம்
- இஸ்ரேல்
- இஸ்ரேலிய உச்ச நீதிமன்றம்
- தலைமை நீதிபதி
- யிட்சாக் அமித்
ஜெருசலேம்: பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நாளை இஸ்ரேல் செல்கிறார். அங்கு இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் அவர் உரையாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இஸ்ரேல் உச்ச நீதிமன்றத் தலைவர் யிட்சாக் அமித்தையும் நாடாளுமன்றத்திற்கு அழைக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை இஸ்ரேல் சபாநாயகர் அமீர் ஓஹானா புறக்கணித்து விட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த எதிர்க்கட்சிகள், பிரதமர் மோடியின் நாடாளுமன்ற உரையை புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளனர். இது பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் முன்னாள் எம்பிக்களை அழைத்து அவையை நிரப்பப்போவதாக சபாநாயகர் அமீர் ஓஹானா அறிவித்து உள்ளார்.
