×

நெல்லிக்குப்பம் அருகே தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல்

நெல்லிக்குப்பம், பிப். 24:நெல்லிக்குப்பம் அடுத்த விலங்கல்பட்டு மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ரஞ்சித். விவசாய கூலித் தொழிலாளி. ரஞ்சித்துக்கும் அதே பகுதியை சேர்ந்த ராமலிங்கம் மகன் ராமதாசுக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று காலை ரஞ்சித் தனது வேலையை முடித்து விட்டு ராமதாஸ் வீட்டின் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது முன் விரோதம் காரணமாக ராமதாஸ், ரஞ்சித்தை ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனை தட்டி கேட்ட ரஞ்சித்தை, ராமதாஸ் மற்றும் அவரது சகோதரர்கள் சேகர், காமேஷ், சந்துரு ஆகியோர் கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து ரஞ்சித்தின் மனைவி ரசிமா, நடுவீரப்பட்டு காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Nellikuppam ,Ranjith ,Vilankalpattu Mariamman Koil Street ,Ramalingam ,Ramadas ,
× RELATED 30 ஆண்டு கால போக்குவரத்து நெரிசலுக்கு...