×

பிராமணர் சங்க பொதுக்குழு கூட்டம்

தர்மபுரி, பிப்.8: தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் சார்பில், தர்மபுரி மாவட்ட பொதுக்குழு கூட்டம், மாவட்ட தலைவர் சாய்ராம் தலைமையில் நடந்தது. இதில் மாநில தலைவர் ஹரிஹர முத்து ஐயர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். நிர்வாகிகள் ரமேஷ்குமார், சூர்யநாராயணன், ஜகந்நாதன், ராமமூர்த்தி, வைத்யநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10சதவீத இட ஒதுக்கீடு சட்டத்தை தமிழக அரசு விரைந்து அமல்படுத்த வேண்டும். கோயில்களின் அறங்காவலர்களாக இந்துக்களை நியமிக்க வேண்டும்.

அதிக பிராமணர் வாக்காளர்களைக் கொண்ட தொகுதிகளுக்கு, பிராமண சமூகத்தில் இருந்து வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். அனைத்து வழிபாட்டு தலங்களிலும், தற்காலிகமாக மற்றும் பரம்பரை முறை அர்ச்சகர் மற்றும் பரிஜாரகர் ஆகியவர்களுக்கு நிரந்தர பாதுகாப்பும், பணி நலன் கருதி ஒரு தனி வாரியம் அமைக்க வேண்டும். தமிழகத்தில் பிராமண நலவாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிவேற்றப்பட்டன.

Tags : Brahmin Association General Committee Meeting ,
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா