சென்னை: நம் தமிழை காத்து அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் கொண்டு சேர்ப்பது நமது கடமை என உலக தாய்மொழி நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது: தமிழே நீ வாழ்ந்திடு! உலக தாய்மொழிகள் நாள்! ஏராளமானோர் உயிர்கொடுத்து காத்த நம் உயிர்நிகர் தமிழ்மொழியை எத்தனை சிறப்புகள் சொல்லி அழைத்தாலும் “தமிழே” என்று அழைத்திடும்போது கிடைத்திடும் இன்பம் மகத்தானது.
கலைஞரின் இந்த வரிகளை பாடலாக்கிய அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். அவர்களுக்கு என் நன்றி! நம் தமிழை காத்து – அதை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் கொண்டு சேர்த்து, செழிப்போடு வாழவைக்க வேண்டியது உலகெங்கும் வாழும் அனைத்து தமிழர்களின் பொறுப்பு! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
