×

பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு.. திருப்பூரில் 6 இளைஞர்களை கைது செய்து டெல்லி போலீஸ் அதிரடி

திருப்பூர் : திருப்பூரில் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்ட 6 பேர் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். டெல்லி செங்கோட்டை குண்டு வெடிப்பு சம்பவத்தில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வரிசையில் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக சில இளைஞர்கள் முகநூலில் கருத்து பதிவிட்டு வந்துள்ளதை டெல்லி போலீசார் கண்டறிந்துள்ளனர். இதில் வங்கதேசத்தை சேர்ந்த 6 இளைஞர்கள் தான் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் திருப்பூரில் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து இன்று டெல்லி கியூ பிரிவு போலீசார் திருப்பூர் வந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் திருப்பூர் ஊத்துக்குளி, பல்லடம் பகுதிகளில் உள்ள பனியன் நிறுவனங்களில் பணியாற்றி வந்துள்ளனர். இந்த நிலையில் டெல்லியில் இருந்து வந்த கியூ பிரிவு போலீசார் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கே சென்று 6 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். ஊத்துக்குளியில் 2, பல்லடத்தில் 3, திருமுருகன்பூண்டியில் ஒருவர் என 6 பேரை டெல்லி காவல்துறை கைது செய்தது. அப்போது அவர்களிடம் இருந்து 8 செல்போன்கள் மற்றும் 16 சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. 6 பேரும் போலி ஆதார் அட்டைகளை பயன்படுத்தி வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவர்கள் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டது மட்டுமின்றி, உளவு பார்த்து பயங்கரவாதிகளுக்கு தகவல் தெரிவித்தும் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Tags : Delhi Police ,Tiruppur ,DELHI ,PENKOTA ,Pakistan ,
× RELATED டெல்லி, செங்கோட்டையில் குண்டு...