×

மதுரை, தேனிக்கு கூடுதல் பஸ் வசதி கேட்டு பயணிகள் மறியல்

திருப்பூர்,பிப்.21:தேனி, மதுரைக்கு போதிய பஸ் வசதி இல்லை எனக்கூறி திருப்பூர் கோவில் வழி பஸ் நிலையத்தில் பயணிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னலாடை தொழில் நிறைந்த திருப்பூரில் வெளி மாநிலத்தவர்கள் போன்று வெளி மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளர்களும் ஏராளமானோர் தங்கி வேலை செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் மதுரை, தேனி செல்லக்கூடிய பஸ்கள் கோவில் வழி பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு செல்கிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் நள்ளிரவு மதுரை,தேனிக்கு குறைவான பஸ்கள் மட்டுமே இயக்குவதாக கூறியும்,  கூடுதல் பஸ்களை இயக்க கோரியும் பயணிகள் கோவில் வழி பேருந்து நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து நல்லூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைத்தனர்.

 

Tags : Madurai ,Theni ,Tiruppur ,Tiruppur Kovil Bus Stand ,
× RELATED அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம்