×

நீடாமங்கலம் பகுதியில் 20 ஆயிரம் ஏக்கரில் கோடை சாகுபடி தொடங்கியது

நீடாமங்கலம், பிப்.21: நீடாமங்கலம் வேளாண் கோட்ட பகுதியில் 20 ஆயிரம் ஏக்கரில் கோடை சாகுபடி தொடங்கியது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வேளாண் கோட்ட பகுதிகளான சித்தமல்லி, பரப்பனா மேடு, பூவனூர், மேலப்பூவனூர், காளாச்சேரி, கோவில் வண்ணி, ஆதனூர், ராயபுரம், ராஜபகபையன் சாவடி, அனுமந்தபுரம் ,ரிஷியூர், கானூர், பருத்திக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 43 ஆயிரம் ஏக்கரில் தாளடி சாகுபடி செய்து தற்போது அறுவடைப்பணி மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இந்தப்பகுதிகளில் முன்கூட்டியே தாளடி பணியை தொடங்கியவர்கள் இயந்திர அறுவடைப்பணி முடித்து சுமார் 20,000 ஏக்கரில் கோடை சாகுபடி பணியை தொடங்கி நாற்றங்கால் சரி செய்து விதையிடும் பணியில் ஈடுபட்டு விதைகள் வளர்ந்து நடவு பணிக்கு தயாராக வருகிறது.

 

Tags : Needamangalam ,Tiruvarur district ,Sitthamalli ,Parappana Medu ,Poovanur ,Melapoovanur ,Kalacheri ,Kovil Vanni ,Athanur ,Royapuram ,Rajabhagabaiyan Chavadi ,
× RELATED மதுபாட்டில்கள் பறிமுதல்