×

மரண தீர்மானம் தவெக புது பிளான்

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் செயல்பாடுகள் அனைத்தும் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை எழுப்பி வருகிறது. இந்த வகையில், சேலத்தில் தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள், மக்கள் மன்றத்தில் கேலிக்கூத்தாக மாறியுள்ளது. சேலம் தெற்கு தொகுதி சார்பில் பகுதி மற்றும் வார்டு செயலாளர்கள் ஆலோசனைக்கூட்டம், மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் பார்த்திபன் தலைமையில் நடந்தது. இதில் தீர்மானமாக பரிந்துரைக்கபட்ட திட்டங்கள் அனைத்தும் சர்ச்சையின் உச்சமாக மாறியுள்ளது.

இதில் முதலில் இருப்பது இறப்பு உதவிதிட்டம். இந்த திட்டத்தில் ஏழை மற்றும் வறுமைகோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தில் யாரேனும் மரணம் அடைந்தால் தவெக சார்பில் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். வாடகை இல்லா பிரீசர் பாக்ஸ், 25 நாற்காலிகள், ஷாமியானா வழங்கப்படும். இறந்தவருக்கு கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும் என்று ெதரிவிக்கப்பட்டுள்ளது. தவெக தலைவர் விஜய் பங்ேகற்கும் கூட்டங்களில் உயிர் பலிகள் என்பது தொடர்கதையாகி வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் சேலத்தில் தவெக கூட்டத்தில் இறப்பு உதவித்திட்டம் என்ற பெயரில் நிறைவேற்றிய தீர்மான பரிந்துரை, மக்களை கொதிப்பில் ஆழ்த்தியுள்ளது. இதற்கடுத்து திருமணமாகும் ஏழைப்பெண்களுக்கு ‘தாய்மாமன் வீட்டு சீர்’ என்ற பெயரில் ரூ.5 ஆயிரம் மதிப்பிலான வீட்டு உபயோக பொருட்கள் வழங்கப்படும். கர்ப்பிணிகளுக்கு கட்சியின் மகளிரணி சார்பில் வளைகாப்பு விழா நடத்தி ‘தாய்மாமன் சீர்’ வழங்கப்படும். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு யாகம் நடத்தி தேர்வு உபகரணங்கள் வழங்கப்படும்.

அனைத்து வார்டுகளிலும் குழந்தைகளுக்கு ரொட்டி-முட்டை-பால் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். அனைத்து வார்டு அலுவலகங்களையும் தளபதி மக்கள் நூலகமாக மாற்றி, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தும் வகையில் மேம்படுத்தப்படும். முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வீடுகளுக்கே சென்று மாதந்தோறும் ரத்தஅழுத்தம், சர்க்கரை அளவு பரிசோதிக்கப்படும். குழந்தைகளின் பிறந்தநாளையொட்டி மரங்கள் நட்டு அதை ‘பசுமை சோலை’ யாக பராமரிக்கப்படும் என்று பல்வேறு வேடிக்கை தீர்மானங்களை பரிந்துரையாக வைத்துள்ளது சர்ச்சையின் உச்சமாக மாறியுள்ளது.

Tags : Thaveka ,Vijay ,Tamil Nadu Vetrikashakam ,Salem ,Salem South ,
× RELATED திருப்பத்தூரில் ரூ.3.65 கோடி...