×

மல்லூர் சிட்கோவில் சிறு,குறு தொழில் தொடங்க விண்ணப்பிக்க அழைப்பு

அரியலூர்,பிப்.5 : அரியலூர் மாவட்டம், மல்லூரில் அமைந்துள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் 24 தொழில்மனைகள் விற்பனைக்கு உள்ளது. சிறு, குறு தொழில் தொடங்க ஆர்வமுள்ள தொழில் முனைவோர்களிடமிருந்து இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை வருகிற 15-2-2021 தேதிக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி. WWW.tansidco.in இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு கிளை மேலாளர், சிட்கோ திருச்சி. அலுவலகத்தை 94450 06575 அல்லது 0431 - 2441177 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா தெரிவித்துள்ளார்.

Tags : Mallur Sitko ,
× RELATED பெரம்பலூரில் செயல்படும் லால்குடி...