×

வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த விழிப்புணர்வு

காரிமங்கலம், பிப்.21: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி, காரிமங்கலம் தாலுகா காரிமங்கலம் டவுன் மற்றும் பல்வேறு வருவாய் கிராமங்களில், 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு மின்னணு இயந்திரங்கள் செயல்பாடு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. வாக்காளர்கள் வாக்களிக்கும் போது, வாக்களிக்கும் சின்னங்களில் வாக்கு விழுவது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விஏஓ அசோக் மற்றும் வருவாய்த்துறையினர் செய்திருந்தனர்.

Tags : Karimangalam ,Palacode assembly ,Karimangalam taluka ,Dharmapuri district ,2026 assembly elections ,
× RELATED சர்வதேச மகளிர் தின விழா 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்