குன்னூர், பிப். 20: திமுகவுடன் கூட்டணி உறுதியானதை தொடர்ந்து குன்னூரில் தேமுதிகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து தேமுதிகவினர் உற்சாகமடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கூட்டணி அமைந்ததை கொண்டாடினர். குன்னூர் நகரச் செயலாளர் கதிரவன் தலைமையில் திரண்ட தேமுதிக நிர்வாகிகள், நகரின் மத்திய பகுதியில் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதில் நகர நிர்வாகிகள் உட்பட ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
