×

பல்லுயிர் பெருக்கம் குறித்து விழிப்புணர்வு

ஊட்டி, பிப். 20: பல்லுயிர் பெருக்கம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் ஒரசோலை பள்ளியில் நடந்தது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள ஒரசோலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், பல்லுயிர் பெருக்கம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன் தலைமை வகித்தார். நாட்டுப்புற கலைஞர் கணேசன் மற்றும் மேலாண்மை குழு மாவட்ட கருத்தாளர் ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், கோத்தகிரி கீ ஸ்டோன் பணியாளர் புவனேஸ்வரி பங்கேற்று, பல்லுயிர் பெருக்கத்தின் அவசியம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, குடிநீர் உற்பத்தி, தாவரங்கள் மற்றும் விலங்குகள் பேணுதல் குறித்து பல்வேறு கருத்துகளை கூறினார். இதில் ஆங்கில பட்டதாரி ஆசிரியர் சோனியா, உதவி ஆசிரியர் கமலா, பள்ளி குழந்தைகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

 

Tags : Ooty ,Orasolai ,School ,Orasolai Panchayat Union Middle School ,Kotagiri ,Nilgiris ,Headmaster ,Nanjundan… ,
× RELATED ஊட்டி முழுவதும் சுற்றுலா பயணிகள்...