×

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

 

சென்னை: திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி மூலம் நாளை ஆலோசனை நடைபெறும். வெல்லும் தமிழ்ப் பெண்கள் என்ற தலைப்பில் வீடு விடாக மேற்கொள்ளும் பிரச்சாரம் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், வரும் பிப்ரவரி 23-ந்தேதி முதல் “வெல்லும் தமிழ் பெண்கள்’ என்ற பெயரில் வீடு வீடாக சென்ற பரப்புரையை தொடங்க வேண்டும் என தி.மு.க. மகளிர் அணியினருக்கு கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளது. இந்த பரப்புரைக்கான தொகுதி வாரியான பயிற்சி கூட்டம் நாளை தொடங்கி 22-ந்தேதி வரை நடைபெற உள்ளது

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை மாலை 6:30 மணிக்கு நடக்கும் என அக்கட்சி அறிவித்துள்ளது. மாவட்டச் செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், தொகுதிப் பார்வையாளர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படுகிறது. அதில் தொகுதி அளவில் பயிற்சியாளாக தேர்வு செய்யப்பட்ட பெண்கள் பங்கேற்க வேண்டும் எனவும் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.

 

 

Tags : DMK ,Chief Minister ,MK Stalin ,Chennai ,Anna Arivalayam ,
× RELATED தமிழ்நாடு வக்ஃபு வாரியம் செயல்பட...