×

தமிழ்நாடு வக்ஃபு வாரியம் செயல்பட சென்னை உயர் நீதிமன்றம் விதித்த இடைக்கால தடை நிறுத்தி வைத்தது உச்சநீதிமன்றம்

 

சென்னை: தமிழ்நாடு வக்ஃபு வாரியம் செயல்பட சென்னை உயர் நீதிமன்றம் விதித்த இடைக்கால தடை நிறுத்தி வைத்தது உச்சநீதிமன்றம். தமிழ்நாடு வக்ஃபு வாரியத்துக்கு தடை விதித்த சென்னை ஐகோர்ட் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீடு வழக்கில் உத்தரவு அளித்துள்ளது. தலைமை நீதிபதி சூர்யகாந்த் அடங்கிய அமர்வு தமிழ்நாடு வக்ஃபு வாரியம் தாக்கல் செய்த மனுவில் இடைக்கால உத்தரவு வழங்கியது. வக்ஃபு வாரியத்தின் நிர்வாக குழு அமைப்பது தொடர்பாக பரிந்துரை அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.

தமிழ்நாடு வக்ஃப் வாரியம் செயல்பட இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக வக்பு வாரியத்துக்கு, தலைவர் உள்பட 10 பேரை நியமனம் செய்து, கடந்தாண்டு நவ.28ல் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்தும் மத்திய அரசின் ஒருங்கிணைந்த வக்ஃப் மேலாண்மை சட்டத்தை முறையாக பின்பற்றாமல் வாரிய உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டிருப்பதாகவும் கூறி வழக்கறிஞர் சவுகத் அலி முகமது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடந்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது அப்போது மனுதாரர் தரப்பில், சட்ட விதிகளின்படி, வக்ஃப் வாரியத்தில் மொத்தம் உள்ள உறுப்பினர்களில் இரண்டு பேர் முஸ்லிம் அல்லாதவர்களாக இருக்க வேண்டும், மாநில பார் கவுன்சிலில் இருந்து ஒரு உறுப்பினர் நியமிக்கப்பட வேண்டும் என விதிகள் பின்பற்றப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. இந்த வாதத்தை கேட்ட நீதிபதிகள் தமிழ்நாடு வக்ஃப் வாரியம் செயல்பட இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டதோடு, வழக்கு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஜனவரி 19 ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

இந்நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தமிழ்நாடு வக்ஃபு வாரியம் செயல்பட சென்னை உயர் நீதிமன்றம் விதித்த இடைக்கால தடை நிறுத்தி வைத்தார். தமிழ்நாடு அரசும் வக்ஃபு வாரிய நிர்வாக குழுவை நியமிப்பது பற்றி ஒரு பரிந்துரையை வழங்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

Tags : Supreme Court ,Chennai High Court ,Tamil Nadu Wakfu Board ,Chennai ,Chennai iCourt ,Chief Justice ,
× RELATED பொது அமைதியை சீர்குலைக்க முயன்ற...