×

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்

பாலக்கோடு, பிப். 19: பாலக்கோடு அறிவு திருக்கோயிலில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் மஞ்சப்பை விழிப்புணர்வு கூட்டம், மாவட்ட நியமன அலுவலர் கைலாஷ்குமார் தலைமையில் நடந்தது. வணிகர் சங்க தலைவர் முத்து தலைமை வகித்தார். வணிகர் சங்க மாவட்ட அமைப்பாளர் சரவணன் சிறப்புரை ஆற்றினார். மாசு கட்டுப்பாட்டு அலுவலர் உதயகுமார், உதவி பொறியாளர்கள், கிருஷ்ணன், ஸ்ரீதர், ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் திருப்பதி, பயிற்சியாளர் காமேஷ் ஆகியோர் பங்கேற்று பேசினர். இதில் பிளாஸ்டிக் கவர் மற்றும் பாலித்தீன் பைகள் பயன்படுத்துவதனால் ஏற்படும் தீமைகள் மற்றும் உடல்நல பாதிப்புகள் குறித்தும், உணவகங்கள், பேக்கரி மற்றும் டீக்கடை உரிமையாளர்களுக்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி, உணவு பொருட்களை பொட்டலமிடுதல் மற்றும் சூடான டீ, பால், சாம்பார் போன்ற பொருட்களை பார்சல் செய்ய பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்த கூடாது எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக மஞ்சள் பைகளை பயன்படுத்தி, சுற்றுப்புற சூழலுக்கு உறுதுணையாக இருக்கும் விதமாக அனைவருக்கும் மஞ்சப்பை வழங்கப்பட்டன. இதில் வணிகர் சங்க பொருளாளர் மாணிக்கம், செயலாளர் தருமன் மற்றும் வணிகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : eradication ,Palacode ,Palacode Arivu Temple ,District ,Officer ,Kailash Kumar ,Traders Association ,President ,Muthu ,Saravanan ,
× RELATED பெண் நிர்வாகிக்கு பாலியல் தொல்லை...