×

திருத்துறைப்பூண்டி வட்ட அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யும் பணி தேர்தல் அலுவலர் நேரில் ஆய்வு

திருத்துறைப்பூண்டி, ஏப் 2: திருத்துறைப்பூண்டி வட்ட அலுவலகத்தில் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யபட்டு வரும் பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்க்கொண்டர். திருவாரூர் மாவட்டத்தில் வேட்பு மனுதாக்கல் மார்ச் 30ம்தேதி துவங்கப்பட்டது. இந்நிலையில் சட்டமன்ற தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலகங்கள் உரிய போலீஸ் பாதுகாப்புடன் தயார் நிலையில் இருந்து வருகின்றன.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி, தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 30ந் தேதி தொடங்கி வரும் 6ந் தேதி வரையில் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 8 நாட்கள் இருந்து வரும் நிலையில் 4 நாட்கள் விடுமுறை நாள் என்பதால் மீதமுள்ள 4 நாட்களில் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு அவகாசம் உள்ளது. இன்று, 4, 6 ஆகிய தேதிகளில் மட்டுமே வேட்புமனுக்கள் தாக்கல் செய்வதற்கு கால அவகாசம் உள்ளது.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்ட அலுவலகத்தில் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யபட்டு வரும் பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்க்கொண்டர், ஆய்வின்போது திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் வட்டாட்சியர் செந்தில்குமார், தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் சிரஞ்சீவி ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

Tags : Tiruthuraipoondi Circle Office ,Tiruthuraipoondi ,Thiruvarur ,
× RELATED டால்மியாபுரம் பகுதியில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு