×

ஊதிய உயர்வு வழங்க கோரி அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

திருவாரூர்,பிப்.18: ஊதிய உயர்வு வழங்கிட கோரி திருவாரூரில் அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர் சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.நீதிமன்றம் மற்றும் யுஜிசி நிர்ணயம் செய்துள்ளவாறு மாத ஊதியமாக ரூ.50 ஆயிரம் வழங்கிட வேண்டும், பணியில் இருக்கும் அனைத்து கவுரவிளையாளர்களுக்கும் பணி பாதுகாப்பினை உறுதி செய்திட வேண்டும், ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கிட வேண்டும்,

பணியின் போது இறந்த விரிவுரையாளர்களுக்கு பணிக்கொடையாக ரூ 25 லட்சம் வழங்கிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு கல்லூரி கௌரவ விரைவுரையாளர்கள் சங்கத்தினர் நேற்று திருவாரூரில் திரு.வி.க அரசு கலைக் கல்லூரி முன்பாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

Tags : Thiruvarur ,college honorary lecturers' ,UGC ,
× RELATED 30 ஆண்டு கால போக்குவரத்து நெரிசலுக்கு...