×

காஞ்சிபுரத்தில் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம்: கலெக்டர் தகவல்

காஞ்சிபுரம், பிப்.18: காஞ்சிபுரத்தில் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது என்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு இரண்டு மாதத்திற்கு ஒருமுறை கலெக்டர் தலைமையில் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படும் என்று மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பிப்ரவரி மாதத்திற்கான மாற்றுத்திறனாளிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் (18ம் தேதி) இன்று மாலை 3.30 மணிக்கு மாவட்ட கலெக்டர் மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அனைவரும் பங்கேற்று, தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் தொலைப்பேசி எண்: 044-29998040ல் தொடர்புகொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Kanchipuram ,Collector ,Kalaiselvi Mohan ,
× RELATED எழும்பூர் ரயில் நிலையத்தில்...