×

ஆட்சேபனையற்ற அரசு புறப்போக்கும் நிலங்களில் வசிக்கும் 77,800 பேருக்கு வீட்டு மனை பட்டா : அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

சென்னை: தமிழக அரசின் 2026-27ம் நிதி ஆண்​டுக்​கான இடைக்​கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.

அதில் அவர் பேசியது,

*சென்னையில் உள்ள நீர் நிலைகளை ஒருங்கிணைத்து சமச்சீராக குடிநீர் விநியோகிக்க முதன்மை சுற்றுக்குழாய் திட்டத்திற்கு ரூ.3,109 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ரூ.104 கோடியில் 30 முதல்வர் படைப்பகங்கள் உருவாக்கப்படுகின்றன.

*தொழில் முதலீடுகள் பெருமளவில் ஈர்க்கப்பட்டுள்ளன. இதுவரை 36 லட்சம் வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் 13.3 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு 1179 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. விழுப்புரம், தஞ்சாவூர், வேலூர், காரைக்குடி ஆகிய இடங்களில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் திறக்கப்பட்டுள்ளன. தொழில்துறைக்கு 4882 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

*திருச்சி, மதுரை, ஓசூரில் ரூ.1,070 கோடியில் புதிய டைடல் பூங்கா நிறுவப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் தகவல் தொழில் நுட்பத்துறையில் 25,500 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். நாமக்கல், திருவண்ணாமலை, விருதுநகர், நெல்லை, குமரி, ஈரோடு, புதுக்கோட்டையில்ரூ.388 கோடியில் மினி டைடல் பூங்கா நிறுவப்பட்டு வருகிறது.

*தமிழ்நாடு செமி கண்டக்டர் இயக்கம் எதிர்வரும் 5 ஆண்டுகளுக்கான செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. சென்னை தரமணியில் செமிகண்டக்டர் மையம் அமைக்கும் பணி நடைபெறுகிறது. கப்பல் கட்டுமானம், கப்பல் இயங்கு துறைகளில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் கப்பல் கட்டும் தொழில் கொள்கை விரைவில் வெளியிடப்படும்.

*கோவையில் தங்க நகை பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட புத்தொழில் நிறுவனங்கள் எண்ணிக்கை 5 மடங்கு உயர்ந்துள்ளது. 5 ஆண்டுகளில் புத்தொழில் நிறுவனங்கள் எண்ணிக்கை 13 ஆயிரத்தை விஞ்சியுள்ளது.

*மருத்துவத்துறைக்கு ரூ.22,090 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நலன் காக்கும் ஸ்டாலின் முகாம் மூலம் 17 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளனர். இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 5.11 லட்சம் பேர் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது, இதற்காக ரூ.413 கோடி செலவிடப்பட்டுள்ளது. மகப்பேறு நிதி உதவி திட்டத்திற்கு ரூ.4,000 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

*புற்றுநோய் விழிப்புணர்வு கண்டறிதல் முகாம் மூலம் 79.17 லட்சம் பேருக்கு பரிசோதனை – அவர்களில் 1,929 பேருக்கு புற்றுநோய் கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் 2.55 கோடி பயனாளிகளுக்கு முதல் முறை சேவைகள் 4.75 கோடி பயனாளிகளுக்கு தொடர் சேவைகள் வழங்கப்படுகின்றன.

*1943 கோடி ரூபாய் சிறு,குறு நடுத்தர தொழில் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 95 சதவிகித கிராமங்களுக்கு அதிவேக இணைய வசதி ஏற்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத்துறைக்கு 219 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

*கடந்த 5 ஆண்டுகளில் ஆட்சேபனையற்ற அரசு நிலங்களில் வசிப்போருக்கு ஒருமுறை சிறப்பு வரன்முறைப்படுத்தும் திட்டத்தில் 77,800 இணையவழி பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

*பாசன வசதிக்காக தூர்வாரும் பணிகள் ரூ.498 கோடியில் நடைபெறுகிறது. நீர்வளத்துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.10,076 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் ரூ.1,618 கோடி மதிப்பீட்டில் வெள்ள தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

*எரிசக்தித் துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.18,091 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக எண்ணிக்கை கொண்ட ராம்சார் தளங்கள் உள்ளன. 20 ராம்சார் தளங்களுடன் இந்தியாவில் அதிக ராம்சார் தளங்கள் தமிழகத்தில் உள்ளன.

*தமிழ்நாட்டில் இருந்து ஆண்டுதோறும் ரூ.2.5 லட்சம் கோடி தகவல் தொழில்நுட்பம் சார்ந்த ஏற்றுமதி நடைபெறுகிறது. சென்னையில் 250 உலகளாவிய திறன் மையங்கள் கோவை, மதுரை திருச்சியில் உருவாக்கப்பட்டு வருகின்றன.2024-2025ல் 32 மாவட்டங்களிலிருந்து தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதி நடைபெறுகிறது.

*அலையாத்தி காடுகளை மீள் உருவாக்கம் செய்யும் பணிகள் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் பசுமை பரப்பை உயர்த்த அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.5 ஆண்டில் 100 புதிய பாதுகாக்கப்பட்ட காடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

*நீலகிரி ரேஸ்கோர்ஸ் பகுதியில் 52.34 ஏக்கர் பரப்பளவில் ரூ.70 கோடியில் பூங்கா அமைக்கப்படுகிறது.
கிண்டி ரேஸ்கோர்ஸ் பகுதியில் 118 ஏக்கர் பரப்பளவில் சுற்றுச்சூழல் பூங்காவையும் அரசு அமைக்கிறது

*புதிய சிற்றுந்து திட்டம் மூலம் 6303 புதிய வழித்தடங்களில் சிற்றுந்து சேவை வழங்கப்பட்டுள்ளது. போக்குவரத்து துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.13,062 கோடியும் விடியல் பேருந்து திட்டத்திற்கு ரூ.4,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மாணவர்கள் பேருந்து பயண கட்டணம் திட்டத்திற்காக ரூ.1,782 கோடி, டீசல் மானியத்திற்காக ரூ.1,857 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

*1,168 தரைப்பாலங்கள் உயர்மட்ட பாலங்களாக மாற்றப்பட்டுள்ளன. முக்கிய நகரங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்க உயர்மட்ட சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

Tags : Patta ,Minister ,Gold South Rasu ,Chennai ,Finance Minister ,Thangam Tennarasu ,Government of Tamil Nadu ,
× RELATED நாடே திரும்பிப் பார்த்த மகளிர் உரிமை...