×

கர்நாடக காங். எம்எல்ஏ வெற்றி செல்லாது: உயர்நீதிமன்றம் தீர்ப்பு

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைக்கு கடந்த 2023ல் நடந்த தேர்தலில் சிக்கபள்ளாபுரா மாவட்டத்தில் உள்ள பாகேபள்ளி சட்டப்பேரவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சுப்பாரெட்டியும், பாரதிய ஜனதா வேட்பாளராக முனிராஜ் உள்பட பலர் போட்டியிட்டனர். இதில் சுப்பாரெட்டி வெற்றி பெற்றார். சுப்பாரெட்டியின் வெற்றியை ரத்து செய்யக்கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் முனிராஜ் மனு தாக்கல் செய்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி எம்ஜிஎஸ் கமல் நேற்று தீர்ப்பளித்தார். அதில் சுப்பாரெட்டி, தனது குடும்பத்தில் உள்ள சொத்து விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்யாமல் மறைத்துள்ளார். ஆகவே சட்டப்பேரவை தேர்தலில் பாகேபள்ளி தொகுதியில் சுப்பாரெட்டி பெற்ற வெற்றியை ரத்து செய்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

Tags : Karnataka Congress ,MLA ,Bengaluru ,2023 Karnataka Assembly ,Subbareddy ,Congress ,Bagepalli Assembly ,Chikkaballapura district ,Muniraj ,BJP ,
× RELATED சர்வதேச கடல்வழிப் பாதை முடக்கத்தால்...