- போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு
- Kariyapatti
- ஒழிப்பு
- விருதுநகர் மாவட்ட இந்திய செஞ்சிலுவை சங்கம்
- இன்ஸ்பெக்டர்
- காந்தீபன்
- பள்ளி தலைமை
- கீதா
- நகரம்
- பஞ்சாயத்து
- தலைவர் செந்தில்
காரியாபட்டி, பிப். 16: காரியாபட்டியில் விருதுநகர் மாவட்ட இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இன்ஸ்பெக்டர் காண்டீபன் தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் கீதா முன்னிலை வகித்தார். பேரூராட்சி தலைவர் செந்தில் பேரணியை துவக்கி வைத்தார்.
பேரணியில் பங்கேற்ற மாணவ-மாணவிகள் மது போதையால் ஏற்படும் பாதிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சாலை பாதுகாப்பு விதிகள், பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவது குறித்து விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர்.இதில் பள்ளி முதல்வர் இமாகுலேட், துணை முதல்வர் கயல்விழி மற்ம் சாரண ஆசிரியர் பிரபாகரன், செஞ்சிலுவை சங்க ஆசிரியர் ராஜபாண்டி மற்றும் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
