×

திமுக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்

தர்மபுரி, பிப்.16: தர்மபுரி சட்டமன்ற தொகுதி, தர்மபுரி மேற்கு நகர திமுக சார்பில், உங்களைத் தேடி உங்கள் நகராட்சியில் திமுக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்திற்கு தர்மபுரி மேற்கு நகர திமுக பொறுப்பாளர் கவுதம் தலைமை வகித்தார். தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வழக்கறிஞர் ஆ.மணி எம்பி கலந்து கொண்டு, 2026 சட்டமன்றத் தேர்தலில் செய்ய வேண்டிய ஆக்கப் பணிகள் குறித்து பேசினார்.

கூட்டத்தில், தர்மபுரி முன்னாள் மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி, அமைப்புசாரா ஓட்டுநர் அணி மாநில செயலாளர் தர்மபுரி தொகுதி பார்வையாளர் செங்குட்டுவன் ஆகியோர் பேசினர். இக்கூட்டத்தில், மாவட்ட பொருளாளர் தங்கமணி, மாவட்ட துணை செயலாளர் ரேணுகாதேவி, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மே.அன்பழகன்,

மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் தாஸ், நகர நிர்வாகிகள் அழகுவேல், சம்மந்தம், வடிவேல், சவுந்தரராஜன், பாஸ்கர், வெங்கடாசலம், தமிழ்ச்செல்வன், சாந்தரூபிணி மற்றும் சார்பு அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள், நகரமன்ற உறுப்பினர்கள், நகர நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், வாக்குச்சாவடி முகவர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

Tags : DMK ,Dharmapuri ,Dharmapuri Assembly Constituency ,Dharmapuri West City DMK ,Gautham ,Dharmapuri… ,
× RELATED சென்னை மாவட்டத்தில் உள்ள...