×

எமன் ஏறும் எருமை மாடுபோல் தெரியும் பிரசார வாகனம்; கட்சிக்கே கால்ஷீட் கொடுக்கும் ஒரே தலைவர் விஜய் மட்டும்தான்: கம்யூனிஸ்ட் ‘மரண கலாய்’

கோவில்பட்டி இனாம்மணியாச்சியில் மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் விளக்க, நிதியளிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் கலந்து கொண்டு பேசுகையில், தவெக இது என்ன கட்சி என்று தெரியவில்லை. நம்ம வீட்டுப் பிள்ளைகள் கொஞ்சம் கொஞ்சம் எட்டி பார்க்கிறார்கள், அதற்கு புத்திமதி சொல்ல வேண்டும். விஜய்யின் அரசியல் பற்றி தான் பேச வேண்டும் தவிர அவரின் சொந்த வாழ்க்கையை பேசக்கூடாது.

பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு மார்க்சிஸ்ட் தலைவர்கள் உள்பட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். விஜய் வந்தால் வெடி போடுங்கள். விசில் ஊதுங்கள். ஆனால் அவர் வரும் பிரசார வாகனத்திற்கு வெடி போட்டு விசில் ஊதுகின்றனர். விஜய்யின் பிரசார வாகனம் எமன் ஏறும் எருமை மாடுபோல் தெரிகிறது.  கட்சிக்கே கால்ஷீட் கொடுக்கிற ஒரே தலைவர் விஜய் தான்.

கோட்டையை பிடிக்கிறேன், பிடிக்கிறேன் என்று கூறி இத்துப்போன செங்கோட்டையனை பிடித்துள்ளனர். இது ஒரு நாடக கம்பெனி போல ஓடிக் கொண்டிருக்கிறது. பஞ்ச் டயலாக் எழுதி வந்து ஆவேசமாக பேசுவது அரசியல் அல்ல. திமுக எங்கள் அரசியல் எதிரி, பாஜ கொள்கை எதிரி என்று கூறும் தவெக தலைவர் விஜய், சேலத்தில் நடந்த கூட்டத்தில் கூட ஸ்டாலின் சார் ஸ்டாலின் சார், முதல்வர் சார் என்று கூறிய விஜய் எஸ்ஐஆர் பற்றி ஒரு வார்த்தை கூட ஏன் பேசவில்லை.

ஒன்றிய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு எதிராக இவ்வளவு வஞ்சகத்தை மோடி செய்கிறாரே? விஜய் ஒரு வார்த்தை பேசி இருக்கலாமே? ஏன் எழுதிக் கொடுத்தவர் எழுதி தரவில்லையா, உங்களுக்கு உங்கள் அரசியல் எதிரி தான் முக்கியமா? இல்லை சித்தாந்த எதிரி முக்கியம் இல்லையா என்ற கேள்வியை நாம் எழுப்ப வேண்டியிருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Vijay ,Marana Kalai ,Marxist Party ,Inammaniachchi, Kovilpatti ,Madukkur Ramalingam ,
× RELATED சட்டமன்ற தேர்தலில் போட்டியிட ஏப்.6ம்...