- பாஜா
- எல். சந்தோஷ்
- சென்னை
- பாஜா எல். சந்தோஷ்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ஆதிமுகா
- Bamaka
- அன்புமணி
- Tamaga
- Amamuka
சென்னை: பாஜ நிர்வாகிகளுடன் பி.எல்.சந்தோஷ் சென்னையில் மீண்டும் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது சட்டசபை தேர்தல் வியூகம் குறித்து பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். தமிழகத்தில் அதிமுக தலைமையிலான அணியில் பாஜ, பாமக (அன்புமணி), தமாகா, அமமுக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இன்னும் சில கட்சிகளுடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கூட்டணி விவகாரத்தை எல்லாம் பாஜ தான் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் பாஜவின் தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் கடந்த திங்கட்கிழமை சென்னை வந்தார். தொடர்ந்து அவர் தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இன்னும் 65 நாள் தான் இருக்கிறது. முதல்கட்டமாகவே தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது. இந்த முறை தேர்தலில் பாஜ அதிக தொகுதிகளில் போட்டியிட இருக்கிறது. அதாவது, 46 தொகுதிகள் வரை போட்டியிட கூடும். தேர்தலுக்கு தயார் நிலையில் இருக்க வேண்டும். குறிப்பாக மூத்த தலைவர்கள் தங்களை முன்னிலைப்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பாஜவில் நியமித்த தேர்தல் பொறுப்பாளர்கள் அவர்களுக்கான தொகுதிகளில் ஆர்வத்துடன் பணியாற்ற வேண்டும்\\” என்று கூறியிருந்தார்.
இந்த கூட்டத்தில் பாஜ மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலையை கடுமையாக அவர் எச்சரித்து இருந்தார். தொடர்ந்து அன்று மாலை நடந்த ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் பாஜ அமைப்பு பொதுச்செயலாளர் பதவியில் இருந்து கேசவ விநாயகம் அதிரடியாக மாற்றப்பட்டார். அவர் நீக்கப்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டது. கட்சியில் ஏற்பட்ட பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை. கட்சியை வளர்க்கவில்லை என்றும் அப்போது கூறப்பட்டது.
இந்த நிலையில் பி.எல்.சந்தோஷ் மீண்டும் சென்னை தி.நகரில் உள்ள பாஜ அலுவலகத்தில் நேற்று பாஜ நிர்வாகிகளுடன் திடீரென ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்த கூட்டத்தில் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சட்டபை தேர்தலை எதிர்க்கொள்வதற்கான வியூகம் குறித்தும் கருத்துகளை கேட்டறிந்தார். மேலும் நிர்வாகிகளுடன் தனித்தனியாகவும் பி.எல்.சந்தோஷ் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. ஒற்றுமையாக இருந்து தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளுக்கு அவர் அறிவுரையும் வழங்கினார்.
