×

அண்ணாவின் 52வது நினைவு தினம் அனுசரிப்பு

பெரம்பலூர், பிப்.4: பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையில் திமுக சார்பில் அண்ணாவின் 52வது நினைவு தினத்தை முன்னிட்டு அமைதி ஊர்வலம் நடந்தது. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.பெரம்பலூர் அருகே வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் அண்ணாவின் 52வது நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற அமைதி ஊர்வலத்திற்கு ஒன்றியச் செயலாளர் ஜெகதீசன் தலைமை வகித்தார். வேப்பந்தட்டை கடை வீதியில் இருந்து புறப்பட்ட ஊர்வல த்தில் திமுக மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன், முன்னாள் எம்எல்ஏக்கள் துரைசாமி, ராஜ்குமார், மாவட்ட துணைச் செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர், நூருல்ஹிதா இஸ்மாயில், மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன், மாவட்ட மக ளிரணி செயலாளர் மகா தேவி, அன்னமங்கம் செல்வக்குமார், கிருஷ்ணாபுரம் அன்பு, பெரியம்மா பாளையம் ரமேஷ் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோருடன் ஊர் வலமாக வந்து ஒன்றிய அலுவலகம் முன்புள்ள அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினர்கள் அழகுவேல், வனிதா, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சிவகுமார், வேப்பந்தட்டை பிச்சைபிள்ளை, கலியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிமுக: மாவட்ட அதிமுக சார்பாக பெரம்பலூர் புது பஸ் ஸ்டாண்டு நுழைவு வாயிலில்உள்ள அண்ணாவின் சிலைக்கு மாநில மீனவர் பிரிவு இணைச் செயலாளர் தேவராஜன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் ஆலத்தூர் கர்ணன், சசிகுமார், வேப்பூர் கிருஷ்ணசாமி, செல்வமணி, வே ப்பந்தட்டை சிவப்பிரகாசம், பெரம்பலூர் நகரச் செயலாளர் ராஜபூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இணைச் செயலாளர் ராணி, மாவட்ட துணைச் செயலாளர் லட்சுமி, பேரூர் செயலாளர்கள் பூலாம்பாடி வினோத், அரும்பாவூர் ரெங்கராஜ், மாவட்ட அணி செயலாளர்கள், வீரபாண்டியன், எசனை பன்னீர்செல்வம், வழக்கறிஞர் அய்யம்பெருமாள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

அரியலூர்: அரியலூர் மாவட்டம் செந்துறையில் உள்ள அண்ணா சிலைக்கு திமுக சார்பில், மாவட்ட செயலாளர் சிவசங்கர் தலைமையில், செந்துறை தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், வடக்கு ஒன்றிய செயலாளர் ஞானமூர்த்தி முன்னிலையில் மாலை அணிவித்துமரியாதை செலுத்தினர். இதில் ஒன்றியகுழு உறுப்பினர் காளமேகம், எழில்மாறன். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சசிகுமார் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அரியலூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள அண்ணா சிலைக்கு, திமுக சார்பில் நகர செயலர் முருகேசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதிமுக சார்பில் நகர செயலர் செந்தில் தலைமையில், மாவட்ட மாணவரணி செயலர் சங்கர், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் சந்திரசேகர், தாமரைக்குளம் ஊராட்சி தலைவர் பிரேம்குமார், வழக்குரைஞர் சாந்தி, அரியலூர் பால் கூட்டுறவு சங்கத் தலைவர் கல்லங்குறிச்சி பாஸ்கர், ஒன்றிய செயலர் பொய்யூர் பாலு உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தா.பழூர் : அரியலூர் மாவட்டம் தா.பழூரில் அமைந்துள்ள அண்ணாவின் முழுஉருவ வெண்கலசிலைக்கு, ஒன்றிய திமுக செயலாளர் க.சொ.க.கண்ணன் தலைமையில் மாலை அனுவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

பொதுக்குழு உறுப்பினர் அண்ணாதுரை, மாவட்ட விவசாய தொழிலாளரணி அமைப்பாளர் ராமதுரை மற்றும் கழக முன்னோடிகள் கலந்து கொண்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். ஜெயங்கொண்டம்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அதிமுக சார்பில் அறிஞர் அண்ணாவின் 52-வது நினைவு நாளை முன்னிட்டு நகர செயலாளர் செல்வராஜ் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் காந்தி பூங்காவில் இருந்து ஊர்வலமாக சென்று திருச்சி சாலையில் உள்ள அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளர் கல்யாணசுந்தரம் மாலை அணிவித்தார்.

Tags : Anna ,Remembrance Day Adjustment ,
× RELATED அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சம்மர் கேம்ப்